கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலுள்ள மஹாவாராகி அம்மன் ஆலயத்திற்கு வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ஹாவாராகி அம்மனை தரிசித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ரஜினிகாந்த் கிருஷ்ணகிரி மண்ணின் மைந்தன், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நாச்சிகுப்பத்தில் பிறந்தவர். அவர் தமிழர் இல்லை எனக் கூறி வருகிறார்கள். அதற்கு காரணம் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் கொள்கைகளை கொண்டுவந்துள்ளார். தமிழ்நாட்டில் இரண்டு திராவிட இயக்கங்களையும் வீழ்த்தி ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வரவுள்ளது.
இனி வரக் கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் ஆன்மிக அரசியலா -திராவிட அரசியலா இதுதான் போட்டியாக உள்ளது. ரஜினி தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை உருவாக்குவார். ஆன்மிக அரசியல் மக்கள் மத்தியில் ஒரு புரட்சியை கொண்டுவரவுள்ளது. இந்த திராவிட இருள் மற்றும் திராவிட மாயையிலிருந்து தமிழ்நாட்டை ஆன்மிக அரசியல் மீட்கும் என தெரிவித்தார்.
திமுக ஒரு குடும்ப கட்சியாக மாறிவிட்டது. திமுகவில் உள்கட்சி தேர்தலே நடப்பது கிடையாது. அவர்களது குடும்ப உறுப்பினர்களே முழுக்க பதவியில் உள்ளனர். மகளிர் அணி என்றால் கனிமொழி. இளைஞர் அணி என்றால் உதயநிதி. திமுகவில் ஜனநாயகம் இல்லை. அது குடும்ப கட்சியாகவும், சாராய அதிபர்களின் கட்சியாகவும் மாறிவிட்டது. ஆன்மிக அரசியல்தான் இதற்கு மாற்று அது வரும் 2021இல் வரும்" என்றார்.
இதையும் படிங்க:இந்தி தெரியாது என்றால் இந்தியர் இல்லை என்பீர்களா ?