தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால பைரவர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு குடமுழுக்கு!

கிருஷ்ணகிரி: கந்திகுப்பத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காலபைரவர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

temple

By

Published : Nov 13, 2019, 11:59 PM IST

கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் கால பைரவர் கோயிலில், 12ஆம் ஆண்டு கால பைரவாஷ்டமிப் பெருவிழா 11ஆம் தேதி தொடங்கியது. 11ஆம் தேதியில் இருந்து வரும் 21ஆம் தேதி வரை திங்கள் முதல் வியாழன் வரை 11 நாட்களுக்கு பைரவ மாலை அணியும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

பிற்பகல், 63 நாயன்மார்களுக்கு குடமுழுக்கு நிகழ்ச்சி நடந்தது. இதில், 63 நாயன்மார்களுக்குக் கலசம் வைத்து சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள், யாகம் ஆகியவை நடைபெற்றன.

கால பைரவர் திருக்கோயில்

தேவாரம் திருவாசகப் பாடல்களை பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பாடி கால பைரவரை வழிபட்டனர். தொடர்ந்து மாலையில், பக்தி - பண்பாட்டு நெறியில் நாம் செல்கிறோமா? என்ற தலைப்பில் வழக்காடு மன்றமும், இரவு பக்த மார்கண்டேயர் நாடகமும் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

ABOUT THE AUTHOR

...view details