தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு எல்லையில் வாகனங்களை திருப்பி அனுப்பும் பணி! - Krishnagiri Police

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு எல்லையில் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களைத் தவிர்த்து, பிற வாகனங்களை காவலர்கள் சோதனைச்சாவடி பகுதியிலிருந்து திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

கிருஷ்ணகிரி
தமிழ்நாடு எல்லையில் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பும் பணி

By

Published : Apr 21, 2021, 10:21 AM IST

நாட்டில் கரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில், தமிழ்நாட்டிலும் நாளுக்குநாள் நோய்த்தொற்று அதிகரித்துவருகிறது.

தமிழ்நாட்டில் நேற்றிரவு (ஏப். 20) 10 மணிக்குமேல் இரவு நேர ஊரடங்கு உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழ்நாடு எல்லை ஒசூர் அத்திப்பள்ளியில் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன.

பொதுமுடக்கம்

அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இன்றுமுதல் (ஏப். 21) இரவு 10 மணியிலிருந்து காலை 4 மணிவரை பொதுமுடக்கம் என அறிவித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி அத்திப்பள்ளி தமிழ்நாடு எல்லையில் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களைத் தவிர்த்து, பிற வாகனங்களான கார்கள், ஆம்னி பேருந்துகளையும் காவலர்கள் சோதனைச்சாவடி பகுதியிலிருந்து திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 'சென்னை, காஞ்சி, வேலூர், விழுப்புரம்,தி.மலை மாவட்டங்களின் கடைசி பேருந்துகளின் பட்டியல்!'

ABOUT THE AUTHOR

...view details