தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைத்த பொதுமக்கள்! - வனத்துறை வேண்டுகோள்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே வனத்துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தவர்கள் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

The public who voluntarily handed over unlicensed country guns!
The public who voluntarily handed over unlicensed country guns!

By

Published : Aug 5, 2020, 3:03 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட உரிகம் மற்றும் அஞ்செட்டி வனப்பகுதிகளில் உரிமம் இல்லாத கள்ள நாட்டுத்துப்பாக்கிகளை கொண்டு வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து வனத்துறை அலுவலர்கள், சுற்றுப்புற கிராமமக்கள் கள்ள நாட்டுத்துப்பாக்கிகளை தாமாக வந்து வனத்துறையினரிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதுசம்பந்தமாக பல்வேறு கிராமங்களில் வனத்துறை சார்பில் தொடர்ச்சியாக விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஒசூர் அருகேயுள்ள ஈரண்ணன்தொட்டி, உரிகம், பிலிக்கல், பீர்ணப்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் வைத்திருந்த உரிமம் இல்லாத 10 நாட்டுத் துப்பாக்கிகளை கிராம பெரியோர்கள் முன்னிலையில் வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details