தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதல்ல பாஸிட்டிவ்; இரண்டாவது சோதனையில் நெகட்டிவ்; மாவட்டம் முழுவதும் நிம்மதி! - முதல்ல பாஸிடிவ்; இரண்டாவது சோதனையில் நெகட்டிவ்; மாவட்டம் முழுவதும் நிம்மதி

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே வசித்தவருக்கு முதல்கட்ட கரோனா சோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அடுத்தகட்ட பரிசோதனையின் முடிவில் தொற்று இல்லை என்று முடிவு வந்ததால் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

முதல்ல பாஸிடிவ்; இரண்டாவது சோதனையில் நெகட்டிவ்; மாவட்டம் முழுவதும் நிம்மதி
முதல்ல பாஸிடிவ்; இரண்டாவது சோதனையில் நெகட்டிவ்; மாவட்டம் முழுவதும் நிம்மதி

By

Published : Apr 27, 2020, 8:13 AM IST

கிருஷ்ணகிரி மாவட்ட வாட்ஸ்அப் குழுக்களில் நேற்று முன்தினம் 43 வயது நபருக்கு கரோனா என பரவிய செய்தி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து மாவட்ட மருத்துவ நிர்வாகம் செய்த முதற்கட்ட சோதனையில் கரோனா தொற்று உறுதியானது என்று குறிப்பிட்டு நேற்று ஈ டிவி செய்திவெளியிட்டது.

அதே நபருக்கு நேற்று இரண்டாம் கட்டமாக சென்னையில் உள்ள கிங்ஸ் நிறுவன ஆய்வுக்கூடத்தில் அவரின் தொண்டை, மூக்குச்சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு எதிர் பாலிமரேஸ் செயின் ரியாக்சன் (ஆர்ட்டி.பிசிஆர்) சோதனை மீண்டும் செய்யப்பட்டது. இரண்டாம் கட்ட சோதனை முடிவில் நெகடிவ் என முடிவு வந்ததையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் முற்றிலும் கரோனா இல்லாத மாவட்டமாக தன்னை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இதனால் மாவட்ட மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

முதல்ல பாஸிடிவ்; இரண்டாவது சோதனையில் நெகட்டிவ்; மாவட்டம் முழுவதும் நிம்மதி

முன்னதாக 34 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த ஒருவருக்கு பாசிட்டிவ் என வந்ததால் சந்தேகம் எழுந்ததன் அடிப்படையில் இரண்டுமுறை சோதனை செய்யவேண்டியாதாகிவிட்டது என கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவப்பணிகள் இயக்குனர் கோவிந்தன் ஈ டிவி பாரத்திடம் தெரிவித்தார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details