கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஐகொந்தம் வெப்பாலம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (42). இவர் சந்தேகத்தின் பேரில், தனது மனைவி கஸ்தூரியை கொலை செய்த வழக்கில் சிறைச் சென்றார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் பிணையில் வெளியே வந்த கோவிந்தராஜ், இன்று மாலை கிராமத்தின் அருகே உள்ள மாந்தோப்பில் அடையாளம் தெரியாத சில நபர்களால் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பர்கூர் காவல் துறையினர் கொலையாளி யார்? கொலைக்கான காரணம் குறித்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.