தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வயல்வெளியில் சுற்றித்திரியும் யானைகள்.. சூளகிரி பகுதி விவசாயிகள் ஜாக்கிரதை! - சூளகிரி

மேலுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் கிராமத்தின் அருகே முகாமிட்டிருப்பதால் 5 கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிராமத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்; 5 கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
கிராமத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்; 5 கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

By

Published : Dec 15, 2022, 12:30 PM IST

கிராமத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்; 5 கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி:ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள மேலுமலை வனப்பகுதியில் இருந்து 3 காட்டுயானைகள் வெளியேறி ஒரு மாதமாக சுற்றி வருகின்றன.நேற்றிரவு எண்ணேக்கோல் புதூர் வழியாக சென்ற யானைகள் இன்று காலை முதல் மாதேப்பட்டி கிராமத்திற்கு அருகே முகாமிட்டுள்ளன.

இதனால் எண்ணேக்கொல் புதூர், போட்ரப்பள்ளி, ஒட்டுகொல்லை உள்ளிட்ட 5 கிராம மக்கள் ஆடு, மாடு மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கோ அல்லது வனப்பகுதி ஒட்டிய விளை நிலங்களுக்கோ செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:கழுத்தில் புலிப்பல் டாலர்.. வனத்துறை விசாரணை; உறவினர்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details