தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் திருமணம் செய்த மனைவியை அழைத்துச் சென்ற பெற்றோர்: மனமுடைந்த காதலன் தற்கொலை முயற்சி! - கிருஷ்ணகிரி காதல் விவகாரம் குறித்து ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த மனைவியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றதால், மனமுடைந்த கணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மனமுடைந்த காதலன் தற்கொலைக்கு முயற்சி
மனமுடைந்த காதலன் தற்கொலைக்கு முயற்சி

By

Published : Oct 1, 2020, 1:58 PM IST

கிருஷ்ணகிரி:சோக்காடி கிராமத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட மனைவியை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றதால் மனமுடைந்த காதல் கணவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கிருஷ்ணகிரி அருகேவுள்ள சோக்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி மகன் தேவராஜ் (24). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகள் சௌமியா (20) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி அப்பகுதியிலுள்ள ஒரு கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கு சௌமியாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், காதல் திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு வேண்டி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தொடர்ந்து, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருவரது குடும்பத்தினரும் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, புரட்டாசி மாதம் முடிந்த பிறகு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறிய சௌமியாவின் பெற்றோர், மகளை தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அதன்பிறகு தொலைபேசியில் தொடர்புகொண்ட சௌமியாவின் உறவினர்கள், இருவரையும் பிரித்து விடவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால், மனமுடைந்த தேவராஜ் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், காதல் திருமணம் செய்துகொண்ட இருவரையும் உடனடியாக சேர்த்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேவராஜின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தேவராஜின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்னர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: காதல் மனைவி மூன்றாம் நாள் பிரிவு: காதல் கணவர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details