கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பி சிங்காரி பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், 120 மாடுகள் பங்கேற்றன. இந்நிலையில், இளைஞர் ஒருவர் மாட்டை அடக்க முற்படும்போது மாடு கட்டப்பட்டிருந்த கயிறு இளைஞர் காலில் மாட்டிக்கொண்டதால் மாடு வேகமாக ஓடியது.
அப்போது சக மாடுபிடி வீரர்கள் அந்த இளைஞரை மீட்டனர். பின்பு அவசர ஊர்தியில் இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைக்கப்பட்டார்.