கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று மாட்டுப் பொங்கல் விழா கிராமங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டிணம், பூந்தோட்டம், பாப்பாரப்பட்டி, பூசாரிப்பட்டி, ஓரப்பம் என மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளை சீவி, வர்ணம் பூசி, மாலைகள் அணிவித்தனர்.
பின்னர் மாட்டுத் தொழுவங்களை வண்ண, வண்ண கலர் பேப்பர்கள் கொண்டு அலங்காரம் செய்தனர். அதைத்தொடர்ந்து, கால்நடைகளுக்குப் பழ வகைகள், பொங்கல் சாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு தானியங்களை படையல் செய்து சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர்.