கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று முன்தினம் சூளகிரி அருகே கோபசந்திரத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் குருமூர்த்தி என்பவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். எனினும் அவரது சடலம் இன்னும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, நாகரசம்பட்டி அருகே தளிஹள்ளியில் சவுளூர் மின்வாரிய அலுவலகம் பின்புறம் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று காலை உயிரிழந்தார்.
அதே போல் ஆயுத பூஜைக்காக பூ வாங்கச் சென்ற ஈரோடு மாவட்டம் அத்தாணி கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (36), தனது மகன் முகில்(8) உடன்உத்தனப்பள்ளி அருகேயுள்ள ராமாபுரம் கிராமம் தென்பெண்ணை ஆற்றின் பாலத்திற்குக் கீழ் சென்றபோது இருவரும் ஆற்று வெள்ளத்தில்அடித்துச் செல்லப்பட்டனர்.