கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுஞ்சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவி. லாரி உரிமையாளரான இவர், வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனை எதிரிலுள்ள பத்து சென்ட் நிலத்தை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்க முடிவு செய்து, அதற்கான பத்திரப்பதிவை வேப்பனப்பள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொண்டார்.
பத்திரப்பதிவு முடிந்த பின்பு, தனது காரில் வைத்திருந்த பத்து லட்சம் ரூபாயை நிலம் விற்றவரிடம் எடுத்து தரச்சென்ற போது, காரின் கண்ணாடி உடைந்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், காரினுள் பார்த்த போது உள்ளே வைத்திருந்த பத்து லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.