கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த அஞ்செட்டி அருகே உள்ளது எ.புதூர். இந்தக் கிராமத்தில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டிற்கான முதல்நாள் வகுப்பு இன்று தொடங்கியது.
ஆசிரியையின் பணி மாறுதலுக்கு எதிராக கிராம மக்கள் போர்கொடி! - கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: எ.புதூரில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதிய ஆசிரியரை நியமித்த பின்பே, அதில் பணியாற்றும் ஆசிரியை பணி மாறுதல் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் கல்வி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் அந்தப் பள்ளியில் பணியாற்றிவந்த சுமதி என்கிற ஆசிரியை தற்போது சாக்கலப்பள்ளி கிராமத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கு புதிய ஆசிரியரை நியமித்துவிட்டு அவரை மாற்றக்கோரி எ.புதூர் கிராம மக்கள் தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் பள்ளிக்கு அந்த ஆசிரியரை நியமிக்காத பட்சத்தில் 71 மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்களை பெற்று தனியார் பள்ளிகளில் இணைவதை தவிர வேறு வழியில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.