கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றிய குழு உறுப்பினர் வார்டு எண் 21இல் சுயேட்சை வேட்பாளராக லலிதா மஹா ராஜன் போட்டியிடுகிறார். அவருக்கு மஞ்சள் கைப்பை சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.
மஞ்ச பைக்கு பதிலாக பெண்களின் கைப்பை! அதிர்ந்து போன சுயேட்சை வேட்பாளர்! - krishnagiri local body election
கிருஷ்ணகிரி: சுயேட்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட மஞ்ச பை சின்னத்துக்கு பதிலாக பெண்களின் கைப்பை சின்னம் இடப்பெற்றிருந்ததால் தேர்தல் அலுவலர்களுடன் வேட்பாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால் வாக்குச்சீட்டில் மஞ்சள் பைக்கு பதிலாக பெண்கள் பயன்படுத்தும் கைப் பை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்தல் அலுவலர்களிடம் வாக்குப்பதிவை நிறுத்தவேண்டும் என்று சுயேட்சை வேட்பாளர் லலிதா மகாராஜன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அலுவலர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பாவக்கல் அருகே உள்ள நல்லவம்பட்டி கிராமத்தில் வாக்கு சாவடி எண் 189இல் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.