கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள புளியாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் மதன்குமார். இவரை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்கு கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணை முடிவடைந்து அவரை காவல் துறையினர் சனிக்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசார் விசாரணைக்கு சென்றுவந்த வாலிபர் இரண்டே நாளில் மரணம்! - suspicious death in krishnagiri
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே திருட்டு வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற வாலிபர், உடல்நல குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மதன்குமார் நேற்று அதிகாலையில் உடல்நலக்குறைவால் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த மதன்குமாரின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மதன் குமாரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் புகார் அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மதன்குமாரை விசாரணை செய்த காவல் அலுவலர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து மதன்குமாரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஊத்தங்கரை டி.எஸ்.பி ராஜபாண்டியன் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் மதன்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.