தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதியவரிடம் ஏடிஎம்-மில் உதவுவது போல் நடித்து ரூ.70 ஆயிரம் அபேஸ் - கிருஷ்ணகிரி

ஒசூர் ஏடிஎம்-மில் உதவுவது போல் நடித்து முதியவரின் ஏடிஎம் கார்டை மாற்றி 70 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்தவரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

krishanagri, stranger stole Rs 70,000 by pretending to help an elderly man at an ATM, ATM Card cheating in Krishnagiri, Krishnagiri latest, Hosur, SBI atm in Hosur,  கிருஷ்ணகிரி, முதியவரை ஏடிஎமில் உதவுவது போல் நடித்து ரூ.70 ஆயிரம் திருடிய ஆசாமி
stranger-stole-rs-70000-by-pretending-to-help-an-elderly-man-at-an-atm

By

Published : Mar 9, 2021, 6:40 AM IST

கிருஷ்ணகிரி: ஒசூரை அடுத்த ஒன்னல்வாடியை சேர்ந்தவர் தேவராஜ் (65). கூலித்தொழிலாளியான இவர், ஒசூர் மாநகராட்சி பழைய பெங்களூரு சாலையில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் உள்ள ஏடிஎம்மில் தேவராஜ் பணம் எடுக்க திணறி வந்துள்ளார், அப்போது 30 வயது மதிக்கதக்க இளைஞர் உதவுவதாக கூறி ஏடிஎம் கார்டையும் பாஸ்வர்டு எண்ணையும் கேட்டுள்ளார்.

இவர் இரகசிய எண்ணை கூறியதும் இளைஞர் தன்னிடம் வைத்திருந்த காலாவதியான ஏடிஎம் கார்டை முதியவரிடம் வழங்கிவிட்டு பின்னர் முயற்சிக்குமாறு கூறி முதியவரின் ஏடிஎம் கார்டை எடுத்துச் சென்றுள்ளார். முதியவர் காலாவதியான மாற்றப்பட்ட ஏடிஎம் கார்டு என தெரியாமல் வேறு ஏடிஎம்-க்கு சென்றபோது தனது வங்கி கணக்கில் 20 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

அவர் அடுத்த ஏடிஎம் பார்ப்பற்குள் வங்கி கணக்கில் இருந்து 50ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக முதியவர் எஸ்பிஐ வங்கி கிளையில் நேரில் தெரிவித்ததை தொடர்ந்து ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டது.

இந்த ரூ.70 ஆயிரத்தில் ரூ.20 ஆயிரம் ரொக்கமாகவும், குமரன் சில்க்ஸ் துணிக்கடையில் ரூ.50 ஆயிரம் ஆடைகளாக வாங்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் இருந்த ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாயில் ரூ.70,000-ஐ அபேஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் ரூ.92,000 மட்டுமே அவரது வங்கி கணக்கில் உள்ளது.

இது தொடர்பாக முதியவர் தேவராஜ் ஒசூர் நகர காவல்நிலையத்தில் புகார் வழங்கியதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:பெரியார் சிலைக்கு தீவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details