தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்குவாரி குட்டையில் மூழ்கி மூன்று வடமாநில சிறுவர்கள் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே ஜணபன்டா பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் மீன் பிடிப்பதற்காக இறங்கிய மூன்று வடமாநில சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநில சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு

By

Published : Mar 23, 2019, 7:09 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஜணபன்டா என்னும் கிராமத்தில், அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்கி விவசாய கூலி வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஜணபன்டா அருகே உள்ள கல்குவாரி குட்டையில் முன்னா என்பவர் மீன் பிடிக்க சென்றார். அப்போது அவருடன் அவரது மகன் பாபு, அஜய், லட்சுமி ஆகிய சிறுவர்களும் உடன் சென்றுள்ளனர். அஜய் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு சிறுமி, இரண்டு சிறுவர்களும் குட்டையில் விளையாடி வந்துள்ளனர். திடீரென மூவரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கியுள்ளனர். இதனை கண்ட முன்னா அவர்களை காப்பாற்றக்கோரி அலறினார்.

அவரது அலறல் கேட்டு தோட்டத்தில் வேலைப் பார்த்து வந்த கூலி தொழிலாளிகள், ஓடிவந்து மூவரையும் மீட்பதற்குள் மூன்று சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மத்திகிரி காவல்துறையினர் சிறுவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மீன் பிடிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details