கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் மான்கள் உட்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. சமீபகாலமாக வனப்பகுதியில், நிலவிவரும் வறட்சியால், மான்கள் அவ்வபோது தண்ணீர், உணவை தேடி வனத்தை விட்டு கிராமத்துக்கு வருவது வழக்கம். அந்தவகையில், கடந்த வாரம் வனத்தை விட்டு வெளியேறிய மான் ஒன்றை தெருவில் உள்ள நாய்கள் கடித்து கொன்றது.
தண்ணீரை தேடி கிராம பகுதிக்கு வந்த புள்ளிமான் கிணற்றில் விழுந்து பலி!
கிருஷ்ணகிரி: ஓசூர் வனப்பகுதியிலிருந்து தண்ணீரை தேடி கிராமத்துக்கு வந்த புள்ளிமான் ஒன்றை, நாய்கள் துரத்தியதில், தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்து உயரிழந்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு புள்ளிமான் ஒன்று அகரம் முருகன்கோவில் பகுதிக்குள் வந்தது. அதை தெருவில் இருந்த நாய்கள் விரட்டியதில், புள்ளிமான் நீரில்லாத கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த புள்ளிமானை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். உயிரிழந்தது 60 கிலோ எடைகொண்ட ஆண் புள்ளிமான் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து, வன ஆர்வலர்கள் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியே வரும் வன விலங்குகளை வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டி அமைத்து அதில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என மாவட்ட வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.