கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியைச் சேர்தவர் பாக்கியலட்சுமி. இவரது மகன் சதீஷ்குமார். மது போதைக்கு அடிமையான சதீஷ்குமார் தினமும் பாக்கியலட்சுமியிடம் குடிக்கப் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
குடிக்கப் பணம் கொடுக்க மறுத்த தாய்: கட்டையால் அடித்துக் கொன்ற மகன் - மதுபோதை
கிருஷ்ணகிரி: குடிக்கப் பணம் தர மறுத்த தாயைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மகனை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இந்நிலையில் பாக்கியலட்சுமி நிலத்தை விற்று பணத்தைச் சேமித்து வைத்துள்ளார். அப்பணத்தை குடிக்கத் தர வற்புறுத்தி தனது தாயை சதிஷ் கொடுமைப்படுத்தியுள்ளார். ஆனால், பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்து சதிஷ் பாக்கியலட்சுமியை கட்டையால் அடித்துத் தாக்கியுள்ளார்.
தலையில் பலத்த காயமடைந்த பாக்கியலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி டவுண் காவல் துறையினர் பாக்கியலட்சுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கிருஷ்ணகிரி அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சதீஷ்குமாரைக் கைதுசெய்து காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.