தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சிலம்பக் கலைக்குப் புத்துயிர் கொடுங்கள்' - கலைஞர்கள் கோரிக்கை - சிலம்பக் கலைக்குப் புத்துயிர் கொடுங்கள்

கிருஷ்ணகிரி: தமிழர்களின் பாரம்பரியக் கலையான சிலம்பத்தை முறையாகப் பயிற்றுவிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் தங்களை ஆசிரியராக நியமிக்கக்கோரி சிலம்பக் கலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SILAMBAM ART in krishnagiri, social thinkers demanding to save silambam traditional art, சிலம்பக் கலைக்குப் புத்துயிர் கொடுங்கள், கலைஞர்கள் கோரிக்கை
சிலம்பக் கலைக்குப் புத்துயிர் கொடுங்கள்! கலைஞர்கள் கோரிக்கை

By

Published : Jan 17, 2020, 11:53 AM IST

வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, வேலுநாச்சியார் உள்ளிட்ட அரசர்கள் போர்க்கலையாக சிலம்பத்தைப் பயன்படுத்தி வந்தனர். அது தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் விதமாகவும் சிலம்பம் இருந்துவந்தது. மேலும் கிராமப்புறங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் சிலம்பக்கலை முன்னிலைப்படுத்தப்பட்டு வந்தது.

அதைத்தொடர்ந்து ஒரு காலக்கட்டத்தில் சிலம்பக்கலை வழக்கற்றுப்போனது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அரசால் அனைத்துப் பள்ளிகளிலும் சிலம்பம் கற்றுக்கொடுக்கப்படும் என்று ஒரு ஆணை பிறப்பித்தார். அதிலிருந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் சிலர் சிலம்பம் கற்றுக்கொண்டு வருகிறார்கள்.

வில்சன் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு மூன்று நாட்கள் நீதிமன்ற காவல்

சிலம்பம் கற்றுக்கொள்வது உடலுக்கு மட்டுமல்லாமல், நம் மனதுக்கும் பாதுகாப்பு வளையமாகமாகவும் இருக்கும். மாவட்ட அளவிலும் தேசிய அளவிலும் சிலம்பப் போட்டிகள் அரசால் தற்போது நடத்தப்பட்டுவருகிறது.

சிலம்பக் கலைக்குப் புத்துயிர் கொடுங்கள்! கலைஞர்கள் கோரிக்கை

இதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுவருகிறது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் சிலம்பம் கற்க சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு அங்கீகாரம் வழங்கிய பள்ளிகளில் தங்களைச் சிலம்ப ஆசிரியராக நியமிக்க வேண்டும் என சிலம்புக் கலை ஆர்வலர்களும், அது தொடர்பான முறைசாராப் பணியாளர்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details