தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மளிகைக்கடை குடோனுக்குள் நுழைந்த மலைப்பாம்பு - மீட்ட பொதுமக்கள்

கிருஷ்ணகிரி: மளிகைக்கடை குடோனுக்குள் புகுந்த மலைப்பாம்பு பொதுமக்களின் உதவியுடன் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

snake rescue

By

Published : Oct 28, 2019, 5:03 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தெருவில் குமார் என்பவர் மளிகைக்கடை நடத்திவருகிறார். மளிகைக் கடைக்கு எதிரே குடோன் ஒன்றையும் வைத்துள்ளார். அங்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மளிகைப் பொருள்களை அடைத்து வைத்துவிட்டு தீபாவளியைக் கொண்டாடச் சென்றுள்ளார்.

இன்று காலையில் மளிகைக் கடைக்குத் தேவையான பொருள்களை எடுக்க குடோனைத் திறந்தபோது, அங்கே மிக நீளமான மலைப்பாம்பு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.

மலைப்பாம்பை மீட்ட பொதுமக்கள்

இந்தத் தகவல் உடனடியாக அருகிலுள்ள சூளகிரி வன அலுவலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களே தாமாக முன்வந்து அந்த மலைப்பாம்பைப் பிடித்து சூளகிரி வனத் துறையிடம் ஒப்படைத்தனர். ‌வனத் துறையினர் அந்த மலைப்பாம்பை அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விட்டனர்.

இதையும் படிக்க: ஆம்புலன்ஸ் டிரைவரின் துணிச்சலால் காப்பாற்றப்பட்ட கர்ப்பிணி!

ABOUT THE AUTHOR

...view details