கிருஷ்ணகிரி: காஞ்சிபுரத்தில் உள்ள செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ரூ.6 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று கர்நாடக மாநிலம் கோலார் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஓசூர் அடுத்த பாகலூரை கடந்து கர்நாடக மாநில எல்லைப்பகுதியான முல்பாகல் பக்கமாக தேவராய சமுத்ரா என்ற பகுதி அருகே லாரி சென்று கொண்டிருந்தது.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அடையாளம் தெரியாத கும்பல் லாரியை வழிமறித்தது. லாரி ஒட்டுனரையும், அவரது உதவியாளரையும் அந்த கும்பல் தாக்கி விட்டு லாரியில் இருந்த ரூ.6 கோடி மதிப்பிலான செல்போன்களை கடத்தி சென்றது. காயத்துடன் லாரி ஓட்டுனர், உதவியாளர் இருந்ததை பார்த்த பொதுமக்கள், கோலார் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு சென்று காவல்துறையினர், லாரி கடத்தப்பட்ட நேரத்தில் அந்த பகுதியில் சென்ற வாகனங்கள், அங்குள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.