கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் 15 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை யானை, திம்மசந்திரம் மாகிடி கிராமம் அருகே மயக்க ஊசி செலுத்தியதில் பிடிபட்டது. தற்போது அந்த யானை ஓசூர் அருகே உள்ள சத்தியமங்கலம் காட்டில் விடப்பட்டதால் பொதுமக்களும், விவசாயிகளும் நிம்மதியடைந்தனர்.
ஓசூர் அருகே பிடிபட்ட ஒற்றை யானை! - The elephant who was threatening people was caught
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டையில் 15 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை யானை பிடிபட்டது.
பிடிபட்ட யானை
முன்னதாக நேற்று( ஜூன்10) வியாபாரம் செய்வதற்காக காய்கறி ஏற்றிச் சென்ற வியாபாரியை, இந்த யானை வயிற்றில் மிதித்துக் கொன்றது. இதோடு இந்த யானையால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்