கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து மத்தூர் கீழ் வீதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி(45). இவர் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக ஏலச்சீட்டில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், பணம் கேட்டு வரும் பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், பணம் தர முடியாது என மிரட்டுவதாகவும் அவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று பணத்தை கேட்டு வந்த தேன், ராமசாமி, மணி ஆகியோர் மீது ஜெயந்தி வீட்டில் வளர்த்து வந்த 13 மாடுகளைப் பிடித்து சென்றதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.