தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூர்வாரப்படாமல் திறந்தே கிடக்கும் கழிவுநீர் கால்வாய்! - krishnagiri municipality

கிருஷ்ணகிரி: நகராட்சி சார்பில் தூர்வார திறக்கப்பட்ட சாக்கடைகள் வாரக்கணக்கில் மூடாமல் இருப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

krishnakiri
krishnakiri

By

Published : Jul 22, 2020, 12:10 PM IST

கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் பெங்களூரு சாலை தூர்வாரும் பணிக்காக கழிவுநீர் கால்வாய்கள் திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட கால்வாய்களும் தூர்வாராமல் வாரக்கணக்கில் தேங்கி கிடப்பதால், சாக்கடை கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. பேருந்து நிறுத்தப் பகுதியில் மூடாமல் திறந்து கிடக்கும் கழிவு நீர் கால்வாயால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அவ்வழியாக இரவு நேரங்களில் வரும் பயணிகள் எவரேனும் தெரியாமல் கழிவு நீர் வாய்க்காலில் விழக்கூடும். நகராட்சி ஊழியர்களின் மெத்தனப்போக்கால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். எனவே, சாக்கடை கழிவுகளை உடனடியாக சுத்தம் செய்து மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:டெல்லி வன்முறையில் குற்றஞ்சாட்டப்பட்ட ராவத்தின் பிணை மனு நிராகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details