தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கவலை வேண்டாம், தேர்வில் ஆல் பாஸ்தான்' - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி - பொதுத் தேர்வு குறித்து செங்கோட்டையன்

கிருஷ்ணகிரி: ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பெற்றோர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்றும் இத்தேர்வில் அனைவரும் தேர்ச்சிபெறுவர் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Sengottaiyan
Sengottaiyan

By

Published : Feb 4, 2020, 10:23 AM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் 14 வயதிற்குள்பட்டவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் தேர்வான 8000 மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் ஐந்து நாள்கள் நடைபெறவுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நான்கு இடங்களில் ஹாக்கி, கபடி, கூடைப்பந்து, இறகுப்பந்து உள்ளிட்ட 12 விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டிகளில் பங்கேற்க 32 மாவட்டங்களிலிருந்து வந்துள்ள மாணவ மாணவியருக்கு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு, விலையில்லா உணவு வழங்கப்பட்டுவருவதாகப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒசூரிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரி மைதானத்தில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளைப் பள்ளிக் கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு பொதுத் துறை வேலைவாய்ப்பில் மூன்று விழுக்காடு இடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

விளையாட்டுக்கென தனி பல்கலைக்கழகம் அமைத்த ஒரே மாநிலம் தமிழ்நாட்டில் இருந்துவருகிறது, தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகள், நகராட்சிகளில் இளைஞர் நலனை மேம்படுத்தி அனைவரும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க 68 கோடியே 67 லட்சம் ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டு, விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட உள்ளது.

'கவலை வேண்டாம், தேர்வில் ஆல் பாஸ்தான்' - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து யாரும் பயப்பட வேண்டாம். ஆண்டுதோறும் பள்ளிகளில் நடைபெறும் தேர்வாக மட்டுமே இதுவும் இருக்கும். முன்பு ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆசிரியர்களே வினாத்தாளை தயாரித்து தேர்வு நடத்திவந்தனர். தற்போது அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாளை அரசு வழங்கும், அந்தப் பள்ளி ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு தேர்வு கண்காணிப்பாளராக அனுப்படுவார்கள்.

இத்தேர்வில், அனைவரும் தேர்ச்சிதான் என்பதால் பெற்றோர் பயமோ, எவ்வித கவலையோ கொள்ள வேண்டாம். குறிப்பாக மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாது. மதிப்பெண்கள் பள்ளி குறிப்பேட்டில் மட்டுமே பதிவுசெய்யப்படும். இதனை பெற்றோர் பார்த்து மாணவர்களின் நிலையை புரிந்துகொள்ள முடியும்" என்றார்.

இதையும் படிங்க: இரண்டு மகள்களுடன் ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details