பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா மதரீதியாக பிளவுப்படுத்துவதாகவும், முஸ்லீம்களை குறிவைத்து மசோதா திருத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி ஓசூர் ராம்நகரில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.