கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே திப்பச்சந்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மதிய சத்துணவில் பல்லி விழுந்ததை அறியாமல் மாணவர்கள் உணவை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அதன்பின், 98 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அருகில் உள்ள தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதிய உணவில் பல்லி: பள்ளி மாணவர்கள் வாந்தி, மயக்கம் - lizard
கிருஷ்ணகிரி: பல்லி விழுந்ததை அறியாமல் மதிய உணவை சாப்பிட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 98 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

school students
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்
இதில், சில மாணவர்கள் பரிசோதனைக்காவும், 46 மாணவர்கள் மேல்சிகிச்சைக்காகவும் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஓசூர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் 41 மாணவிகள், 57 மாணவர்கள் என மொத்தம் 98 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், பெற்றோர் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.