தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளிர்பானத்தில் மது... மாணவியைப் பாலியல் வன்புணர்வு செய்த பள்ளி மாணவன் கைது!

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவிக்கு மது கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்த மூவரில் ஒருவரான பள்ளி மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

குளிர்பானத்தில் மது
குளிர்பானத்தில் மது

By

Published : Feb 25, 2020, 7:57 AM IST

Updated : Feb 25, 2020, 8:13 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன், வேப்பனஹள்ளியில் உள்ள பள்ளி ஒன்றில், 11ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்நிலையில், மற்றொரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் வேப்பனஹள்ளி பேருந்து நிலையத்தில் அந்த மாணவன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவ்வழியே வந்த மாணவனின் நண்பர்களான ஜோடுகொத்தூரைச் சேர்ந்த ராஜா (26), திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் மஞ்சுநாத் (22) ஆகிய இருவரும் அங்கு வந்துள்ளனர். மதுபோதையில் வந்த இரண்டு நபர்களும் அந்த மாணவியுடன் பேச்சு கொடுத்துள்ளனர். இதையடுத்து, மது கலந்து வைத்திருந்து குளிர்பானத்தை மாணவியிடம், சாதாரண குளிர்பானம் என ஏமாற்றி பருக வைத்துள்ளனர்.

இதை தொடர்ந்து, மாணவியைத் தனியாக அழைத்துச் சென்று மூவரும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்நிலையில், சுயநினைவுக்கு வந்த மாணவி அவர்களிமிருந்து தப்பித்து தனது பெற்றோர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார்.

பின்னர் உடனடியாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய பள்ளி மாணவனை கைதுசெய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள இளைஞர்கள் இருவரையும் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:வீட்டை உடைத்து தரைமட்டமாக்கிய ஒற்றைக் காட்டு யானை: விவசாயி காயம்

Last Updated : Feb 25, 2020, 8:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details