தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.4.25 மதிப்பிலான குட்கா பறிமுதல்! - கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி: பந்தாரப்பள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்காவைப் பறிமுதல் செய்தனர்.

ரூ.4.25 மதிப்பிலான குட்கா பொருள்கள் பறிமுதல்!
Rs. 4.25 lakh worth of gutka seized by police

By

Published : Aug 11, 2020, 8:30 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி காவல் நிலைய காவல் துறையினர் இன்று(ஆக.11) அதிகாலை பந்தாரப்பள்ளி என்னுமிடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த வேனை நிறுத்தியபோது, அதன் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார். இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர் வேனில் சோதனை செய்தபோது அதில் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்கா, வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் தப்பியோடிய வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details