தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே தனியார் ஏடிஎம்மில் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி
ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

By

Published : Mar 20, 2020, 10:25 PM IST

ஒசூர் அருகே இருதுகோட்டை கிராமத்தில் இந்தியா ஒன் என்ற தனியார் ஏடிஎம் அமைந்துள்ளது. இன்று காலை இந்த ஏடிஎம் உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், ஏடிஎம் சிசிடிவி கேமராக்களை உடைத்து பிறகு ஏடிஎம் மெஷினை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.

ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

அந்த நேரம் அதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டதால் திருடர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் இருதுகோட்டைக்கு விரைந்து சென்று இந்தியா ஒன் ஏடிஎம் அருகே இருந்த பொதுமக்களிடம் விசாரித்தனர்.

இதனைத் தொடர்ந்து தலைமறைவான நபர்களை தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ம.பி முதலிடம்

ABOUT THE AUTHOR

...view details