தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒப்பந்ததாரரின் ஊழலால் பழுதடைந்த சாலைகள்: கிராம மக்கள் சாலை மறியல்! - சாலை மறியல்

கிருஷ்ணகிரி: தரமற்ற தார்சாலை போட்ட ஒப்பந்ததாரரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

By

Published : Mar 30, 2019, 7:46 AM IST

கடந்த 20 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாளேதோட்டம்ஊராட்சியில் சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு தார்ச் சாலை போடப்பட்டுள்ளது.

தார்சாலை போடப்பட்ட ஒரு சில நாட்களிலேயே ஆங்காங்கே பெயர்ந்து வெளியே வருகிறது எனவும், இந்த புதிய தார்சாலைக்கு ஒப்பந்ததாரர் தார் பயன்படுத்தாமல் குருடாயில் பயன்படுத்தியுள்ளார் எனவும், பழையூர் மாரியம்மன் கோயில் அருகே ஏற்கனவே இருந்த கல்வெட்டை இடித்துவிட்டு புதிய கல்வெட்டு அமைக்கப்படாமல் தார்சாலை அமைத்துள்ளனர் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, கிராம ஒப்பந்ததாரர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும், தரமற்ற இந்த சாலையை மாற்றி புதிய தார்சாலை அமைத்து தருமாறு கோரிக்கைவிடுத்து30க்கும் மேற்பட்டகிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details