பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சிப்பதைக் கண்டித்து, பொதுத்துறை ஊழியர்கள், தொழிற்சங்கங்களின் சார்பில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
அதன்படி தொ.மு.ச., எ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யு., அங்கன்வாடி ஊழியர் சங்கம் உள்ளிட்ட தொழிலாளர் அமைப்புக்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், ஒசூரில் உள்ள காந்தி சிலை முன்பு மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்ய முயன்றதால், 200க்கும் மேற்பட்டோரை காவல் துறையின்ர கைதுசெய்தனர்.
மத்திய அரசைக் கண்டித்து ஓசூரில் தொழிற்சங்கங்கள் போராட்டம் இதனிடையே, தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையான ஒசூரில் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. போக்குவரத்து சேவை, வணிகக் கடைகள் என அனைத்தும் வழக்கம்போல் செயல்பட்டன.
இதையும் படிங்க: ரயில்வே தனியார் மயம் - தொழிலாளர்கள் போராட்டம்