தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்பெண்ணையாற்றில் அடித்துச் செல்லப்பட்டவர் மீட்பு! - தென்பெண்ணை ஆற்றில் குளித்து கொண்டிருந்த குருமூர்த்தி

கிருஷ்ணகிரி : சூளகிரி அருகே கோபசந்திரம் தென்பெண்ணையாற்றில் குளிக்கச்சென்ற  கல்லூரி மாணவர் குருமூர்த்தி (21) ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அவர் தீயணைப்புப் படையினரால்  மீட்கப்பட்டார்.

river sinkage student missed

By

Published : Oct 4, 2019, 11:46 PM IST

காமன்தொட்டி அருகே கோபசந்திரம் கிராமத்தில், தென்பெண்ணை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த குருமூர்த்தி (21) , ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் நபரை தேடிவந்தனர். இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 900 கன அடி வீதம் நீர் செல்வதால் குருமூர்த்தியை தேடும் பணி தற்காலிகமாக தோல்வியடைந்த நிலையில், குருமூர்த்தியை தீயணைப்புப் படையினர் போராடி மீட்டனர்.

மேலும், தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு வாரம் முழுவதும் பல்வேறு வகையான பகுதிகளில் பல்வேறு வகையான குட்டைகளில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உட்பட எட்டு சம்பவங்களில் 11 பேர் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details