தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்து நடத்திய மத நல்லிணக்க மொஹரம் திருவிழா! - மொஹரம் திருவிழா

கிருஷ்ணகிரி: தேச ஒற்றுமையை வழியுறுத்தும் வகையில் இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்து நடத்திய மத நல்லிணக்க மொஹரம் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Kirishnagiri

By

Published : Sep 11, 2019, 6:57 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில், மொஹரம் பண்டிகையைப் பல நூறு வருடங்களுக்கும் மேலாக இந்து சமுதாய மக்களும், இஸ்லாமிய சமுதாய மக்களும் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த விழாவின் போது மேல் மக்கான், கீழ் மக்கான் ஆகிய பகுதிகளை சேர்ந்த மூத்தவல்லிகள் இணைந்து , இந்து சமுதாய மக்களை மாலை மரியாதையுடன் அழைத்து வந்து, விழாவில் தலமை ஏற்க வைக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

பின்னர் காவேரிப்பட்டிணத்தின் மையப்பகுதிக்கு வரும் இரு சமுதாய கரகங்ளும் ஒன்று இனைந்து தலைக்கூடுகின்றன. இந்த அரிய நிகழ்வினை காண வந்த ஆயிரக்கனக்கான மக்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் உப்பு, மிளகு, உள்ளிட்டவைகளை கரகத்தின் மீது வீசி தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்.

திருவிழாவில் இஸ்லாமியர்களும், இந்துக்களும்

இதனைத் தொடர்ந்து, அனைத்து சமுதாய மக்களும் தியாகிகளாக வழிப்படும் இமான் உசேன், அசேன் உசேன் நினைவு இல்லத்திற்கு சென்று பூங்கரகங்ளுக்கு சிறப்பு வழிப்பாடுகள் செய்தனர். தொடர்ந்து நினைவு இல்லத்தின் முன்பாக அமைக்கப்படிருந்த தீ குண்டத்தில் ஆண்களும், பெண்களும் உடல் நலம் பெற வேண்டியும் சிறப்பு தொழுகை செய்து வழிப்பட்டனர்.

மத நல்லிணக்க மொஹரம் திருவிழா

பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மதநல்லிணக்கத்தின் அடையாளமாக மொஹரம் துக்க நாளினை இந்துக்களும் இணைந்து நடத்தி மகிழ்வது, மத நல்லிணக்கத்தையும் ஒற்றுமையயும் வலியுறுத்தும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details