தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனநலம் பாதித்தவர் மீது லாரி மோதல்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு! - Hosur Lorry Accidents

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சாலையில் ஓடிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீது லாரி மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மனநலம் பாதித்தவர் மீது லாரி மோதல்  மனநலம் பாதித்தவர் மீது லாரி மோதல் சிசிடிவி காட்சிகள் வெளியீடு  Release of CCTV footage of truck collision on mentally ill person  Larry collides with a mentally ill person  Hosur Lorry Accidents  ஓசூர் லாரி விபத்துக்கள்
Release of CCTV footage of truck collision on mentally ill person

By

Published : Feb 5, 2021, 6:35 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூர் பகுதியில் உள்ள சாலையில் ஒருவா் வேகமாக ஒடிக்கொண்டிருந்த போது நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, அவருக்கு பின்னால் வந்த லாரி அவர்மீது மோதியது. அதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இரண்டு கால்கள் நசுங்கின. இந்நிலையில் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அவர் அனுமதிக்கப்பட்டு, தற்போது பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இது குறித்து பாகலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கர்நாடக மாநிலம் சிக்க திருப்பதியைச் சேர்ந்த சீனிவாசன் (35) என்பதும், அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட நபா் மீது லாரி மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

லாரி மோதும் சிசிடிவி காட்சிகள்

இதையும் படிங்க:திமுக பிரமுகர் வெட்டிக்கொலை: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details