கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று கரோனா ரைவஸ் தடுப்பு பணிகளுக்காக, கரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் ஆகியோருக்கு மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
மருத்துவ உபகரணங்கள் வழங்கிய மாநிலங்களவை உறுப்பினர்! - மாநிலங்களவை உறுப்பினர்
கிருஷ்ணகிரி: கரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு மருத்துவ உபகரணங்களை மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி மாவட்ட ஆட்சியர் பிரபாகரிடம் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு கரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.பி.முனுசாமி ரூபாய் 10 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவச உடை, கிருமி நாசினி, சேனிடைசர், முகக் கவசம்.உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அம்மாவட்ட ஆட்சியர் பிரபாகரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உள்பட பல அரசு அலுவலர்கள் பலர்பங்கேற்றனர்.
இதையும் படிங்க:‘விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ - இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்