தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’மக்களின் பலத்தால் தமிழ்நாட்டின் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்’ - ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ்

கிருஷ்ணகிரி: மக்களின் பலத்தையும் ஆசீர்வாதத்தையும் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ் கூறியுள்ளார்.

Rajini to fill head in Tamil Nadu by force of people
Rajini to fill head in Tamil Nadu by force of people

By

Published : Dec 9, 2019, 8:07 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நகர ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில், ரஜினியின் 70ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், பங்கேற்ற ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திவைத்தார்.

பின்னர் ஏழை, எளியோருக்கு தையல் எந்திரம், சலவைப் பெட்டி, பச்சிளங்குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் உள்ளிட்ட முந்நூறு பேருக்கான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ”நிச்சயம் ரஜினியால் தமிழ்நாட்டு வெற்றிடத்தை நிரப்ப முடியும். மக்கள் பலமும் ஆசீர்வாதமும் அவருக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் இவர்போல் இனி யாரும் பிறக்கமாட்டார்கள்” என்றார்.

ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ் பேச்சு

ரஜினி, கமல் இணைவார்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், அந்த நேரத்தில் இருவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள் என்று கூறினார்.

இதையும் படிங்க: 'ரசிகர்கள் என் மீது வைக்கும் நம்பிக்கை வீண் போகாது' - ரஜினிகாந்த்

ABOUT THE AUTHOR

...view details