ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் பணியாளர்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கபடுகின்றன.
அந்தவகையில், கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சீனிவாசன், இணை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.