கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதியிலிருந்து ஊடேதுர்கம் பகுதிக்கு இன்று (டிச. 2) 12 யானைகள் பெங்களூர் சேலம் ரயில் பாதையில் கடந்து சென்றது.
இதனையடுத்து யானைகள் ரயில் பாதையில் கடக்கும்போது உயிர் இழப்பு ஏற்படாமல் தடுக்க வனத்துறை எடுத்த நடவடிக்கை குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் பிரபுவிடம் கேட்டோம். அது குறித்து தெரிவித்த அவர், “இன்னும் மூன்று மாதங்களுக்கு யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவது தொடர்ந்து நடைபெறும். யானைகள் ரயிலில் மோதி உயிரிழப்பதை தவிர்க்க அப்பகுதிகளில் 12 வனத்துறை அலுவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.