கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட கரோனா சிறப்பு அலுவலர் பீலா ராஜேஸ் இன்று (மே 08) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு நடத்தினர்.
ஆய்வு கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயிரத்து 532 படுக்கை வசதி உள்ளது. இதில் ஆக்சிஜன் வசதியுடன் ஆயிரத்து 316 படுக்கைகள் உள்ளது.
இதில் அரசு, தனியார் மருத்துவமனையில் மொத்தம் ஆயிரத்து 19 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மீதம் 33 விழுக்காடு படுக்கைகள் தயார் நிலையில் கூடுதலாக உள்ளது. அதே போல் ஆக்சிஜன் கையிறுப்பை பொறுத்தவரை மொத்தமாக 20கிலோ லிட்டர் வசதி உள்ளது.