கிருஷ்ணகிரி அருகே உள்ள கெங்கலேரி மலையின் அடிவாரத்துக்கு செல்லும் மண் பாதையில், மாந்தோப்பின் நடுவே மிகவும் பழமையான, பத்துக்கு பத்து அடி அளவில் கல்திட்டை அமைந்துள்ளது. சுமார் இரண்டு முதல் மூன்று அடி கனம் கொண்ட இக்கல்திட்டை இன்றும் பழமை மாறாமல் அதன் சிறப்பைத் தக்கவைத்துள்ளது.
கெங்கலேரி கிராமத்தில் காணப்படும் இந்தக் கல்திட்டையை முட்புதர்போல் செடிகளும் மரங்களின் வேர்களும் மூடியுள்ளன. இந்தக் கல்திட்டையின் உள்ளே புதையல் இருப்பதாகக்கூட கிராம மக்களிடையே நம்பிக்கை உள்ளது. இதையடுத்து இரவு நேரங்களில் கல்திட்டையை சுற்றி புதையல் தேடும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.