கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் ஒன்றிய இளைஞர் மன்றத் தலைவர் சங்கரன், மாவட்ட மாதர் சங்கத் தலைவர் சுபத்திரா, ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஹத்ராஸ் சம்பவத்தைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்! - ஹத்ராஸ் பெண் கொடூர கொலை
கிருஷ்ணகிரி: இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலின பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரியும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலின பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொலை குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனவும், யோகி ஆதித்யநாத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டுன. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 20 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள் சிவராஜ் சேகர், மாவட்ட நிர்வாகக்குழு கண்ணு நாகார்ஜுனன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.