கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மீண்டும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் வந்ததையடுத்து மாநகராட்சி துப்புறவு ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள் ஓசூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ஓசூர் உழவர்சந்தை, தாலுக்கா அலுவலக சாலை, மீன் மார்க்கேட் பகுதிகள், தேசிய நெஞ்சாலைப்பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில், உள்ளிட்ட இடங்களில் 400 க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த சோதனைகள் நடைபெற்றது. இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பெரும்பாலானோர் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.