கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து தனியார் கொரியர் வாகனம் ஒன்று தேன்கனிக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, ஸ்ரீனிவாசா மஹால் அருகே ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த வாகனம் பொதுமக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்பின், இதுகுறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.