கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஜெகதேவி செல்லும் சாலையில் முருகன் என்பவர் பழைய பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் குடோன் நடத்தி வருகிறார். இந்தக் குடோனில் இன்று மதியம் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
பேப்பர் குடோனில் திடீர் தீ விபத்து : 50 தென்னை மரங்கள் எரிந்து நாசம் - தீ விபத்து
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே பழைய பேப்பர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து நாசமானது.
![பேப்பர் குடோனில் திடீர் தீ விபத்து : 50 தென்னை மரங்கள் எரிந்து நாசம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3971675-thumbnail-3x2-krishnagiri.jpg)
fire accident
பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து
மேலும் இந்த விபத்தில் குடோனைச் சுற்றியிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் எரிந்து நாசமாயின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து
பின்னர் இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.