தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறைக்கு கிருமிநாசினி தெளிப்புக் கருவிகளை வழங்கிய தொண்டு நிறுவனம்!

கிருஷ்ணகிரி: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் துறையினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான கிருமிநாசினி தெளிப்புக் கருவிகளை தனியார் தொண்டு நிறுவனம் வழங்கியுள்ளது.

கிருமிநாசினி தெளிப்பு கருவிகளை வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்!
கிருமிநாசினி தெளிப்பு கருவிகளை வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்!

By

Published : Apr 16, 2020, 5:19 PM IST

Updated : Apr 16, 2020, 5:26 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாள்களாக கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் ஒரேநாளில் புதிதாக 25 பேருக்கு இத்தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 185 பேர் குணமடைந்துள்ளனர். அதேசயம் இன்று ஒருவர் உயிரிழந்ததன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை பதினைந்தை எட்டியுள்ளது.

இதனிடையே, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமலில் உள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்றாயிரம் காவல் துறையினர் மூன்று பகுதிகளாக பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருமிநாசினி தெளிப்புக் கருவிகளை வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்!

இந்த நிலையில் காவல் துறையினருக்கு கிருமிநாசினிக் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சக்திவேலிடம் ஆற்காடு தொண்டு நிறுவனத் தலைவர் பன்னீர்செல்வம் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுகாதார கருவிகளை வழங்கினார்.

இதில் கிருமிநாசினி கருவிகள், தண்ணீர் கேன்கள், அறுக்கும் இந்திரங்கள், முகக்கவசங்கள் ஆகியவவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின்போது ஏ.டி.எஸ்.பி.குமார், காவல் ஆய்வாளர் பாஸ்கர், சுரேஷ்குமார் உள்ளிட்ட காவல் துறையினர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:கரோனா - ரூ. 9.4 லட்சம் நிதி திரட்டிய ஹைதராபாத் சிறுமி!

Last Updated : Apr 16, 2020, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details