தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தற்கொலை! - Krishna district news

கிருஷ்ணகிரி: மனைவி இறந்த துக்கம் தாங்காமல் காவலர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவலர் தூக்கிட்டு தற்கொலை
காவலர் தூக்கிட்டு தற்கொலை

By

Published : Jun 3, 2021, 1:41 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் புருஷோத்தமன். அவரது செந்த ஊர் திருப்பத்தூர் மாவட்டம் வெங்கடாபுரம் அடுத்த பா.முத்தம்பட்டி. இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். மகன், மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில், அவர்கள் பெங்களூருவில் வசித்து வருகின்றனர்.

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் புருஷோத்தமனின் மனைவி கடந்த சில தினங்களுக்கு முன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று புருஷோத்தமன் தனது மனைவியை சிகிச்சைக்காக பர்கூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மருத்துவர் மதியம் 2 மணிக்கு வர சொல்லி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், சுஜாதாவை அழைத்துக் கொண்டு பர்கூர் காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் இருக்க வைத்து விட்டு புருஷோத்தமன் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் மீண்டும் சென்று பார்த்தபோது சுஜாதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து சுஜாதாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அவரது உடலை உடற்கூராய்வுகாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட புருஷோத்தமன், திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று அதிகாலை அவரது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details