தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை! - இளைஞர் கொலை

கிருஷ்ணகிரி: ஓசூரில் பட்டப்பகலில் இளைஞரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!
பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!

By

Published : Jun 12, 2021, 7:22 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வசந்த நகர் 3ஆவது குறுக்கு தெருவில் வசித்த வருபவர் லோகேஷ். இவரது வீட்டின் மேல் தளத்தில் ரகுராம் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று (ஜூன் 12) ரகுராமன் வீட்டிற்கு ஓசூர் அண்ணைநகரைச் சேர்ந்த பாலாஜி என்பவர் சென்றுள்ளார். அப்போது அந்தப்பகுதிக்கு வந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் ரகுராமின் வீட்டின் முன்பு பாலாஜியை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பாலாஜியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொலை செய்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details