தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓசூரில் பூட்டியிருந்த வீட்டில் 150 சவரன் நகைகள் திருட்டு - நகைகள் திருட்டு

கிருஷ்ணகிரி: ஓசூரில் பூட்டியிருந்த வீட்டில் 150 சவரன் நகை, இரண்டு கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

பூட்டியிருந்த வீட்டில் 150 சவரன் நகைகள் திருட்டு: போலீஸ் விசாரணை!
பூட்டியிருந்த வீட்டில் 150 சவரன் நகைகள் திருட்டு: போலீஸ் விசாரணை!

By

Published : Apr 19, 2021, 6:27 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டபள்ளி எம்.எம். நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன். இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம். இவர், பல ஆண்டு காலமாக வெளிநாட்டில் வேலை செய்துவந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு ஓசூர் வந்த அவர் இங்கு மனைவி, இரண்டு மகள்களுடன் வாழ்ந்துவருகிறார்.

இந்நிலையில், மாதையன், அவரது குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான காரிமங்கலம் பகுதிக்குச் சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவிலிருந்த 150 சவரன் தங்க நகைகள், இரண்டு கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.

காலையில் வீட்டு வேலைக்கு வந்த வேலைக்காரப் பெண் கற்பகம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டவுடன் மாதையன் குடும்பத்தினருக்குத் தகவல் அளித்துள்ளார். மாதையன் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் மாதையன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சிப்காட் காவல் துறையினர், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளை: வடமாநிலத்தவர்கள் குண்டர் சட்டத்தில் கைது!

ABOUT THE AUTHOR

...view details